எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 ஜூலை, 2014

காலம்



காலம்
======
மரம் சுள்ளியில்
சருகு சேமிக்கும்;
சாம்பல் அப்ப. 

வானம் அவசரிக்கும்
காற்று
சுவாசிக்கப் பயப்படும். 

தந்திக் கம்பங்கள்
தூரம் காக்கும்; 

நினைவுக் குப்பைகளை
இறுக்க முடிந்து
கொள்ள நினைக்கும்
உன்னையும் என்னையும் போல்

வெள்ளி, 18 ஜூலை, 2014

“குடை”



“குடை”
=========
அது--–
உன்னையும் என்னையும்
தினம் தினம் சாப்பிடும்.
காற்றுடன் கலவி செய்யும்… 

வெய்யில் “க்ரீம்” பூசி
மினுக்கித் திரியும்.
மழையில் தலைக்குக் குளிக்கும்.

உனக்கும்மேல் நானிருக்கிறேன் என
அடிக்கடி ம(ண்டை)ட்டம் தட்டும். 

அது—
உன்னையும் என்னையும்
விழுங்கிக் கொண்டு நடக்கும்.

சனி, 12 ஜூலை, 2014

வெளிச்சம்.



வெளிச்சம்
===============
அணை பொங்கி வழிகின்றது.. 

பிரபஞ்சச் சுருளிலிருந்து
தூசிப் பூக்களை
மிதக்க வைத்துக் கொண்டு
கரை அணையென்ற
தளைகளைத் தகர்த்து
வெள்ளம் பொழிகின்றது. 

தாவரங்களைப் பசுமையாக்கி
மனிதம் துவைத்து
மார்க்கண்டேய வரம் எடுத்து
வெளிச்சம் பாய்கிறது.

சனி, 5 ஜூலை, 2014

கன்னிப்பெண்கள் :-



கன்னிப்பெண்கள் :-

பெண்பார்ப்பு வைபவத்தில்
மாப்பிள்ளை ஆசிரியர்
கதைக்கன்னிகளைத் தம்
இல்லப்பத்ரிக்கையில்
பிரசுரிக்க இயலாமைக்கு
வருந்துகிறோம் என்று
கடிதம் அனுப்பியதால்
வாழ்க்கையையே
பத்ரிக்கை ஆக்கிக்கொண்டுவிட்டார்கள்.


வெள்ளி, 4 ஜூலை, 2014

நீயும் உன் நினைவும்



நீயும் உன் நினைவும்
======================
பனிப் புற்கள்
பூ விழுங்கி
நிலம் கடிக்கும்.
ஈரத் தடம் பதிக்கும்
உன் நினைவு போல.! 

பசுமை செதுக்கும்
என்னைச் சமைத்த
உன்னைப் போல !

சலசலத்தோடும்
நீரோடை..
மனசு சூடிக் கொண்ட
உன் நினைவுக் கொலுசின்
இதமான சிதறல் போல..!

Related Posts Plugin for WordPress, Blogger...