எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஜனவரி, 2016

பிரபஞ்சச் சுருள் :-



வெளிச்சம் :-

அணை பொங்கி வழிகின்றது,
பிரபஞ்சச் சுருளிலிருந்து.

தூசிப்பூக்களை
மிதக்க வைத்துக்கொண்டு.

கரை அணையென்ற
தளைகளைத் தகர்த்து
வெள்ளம் பொழிகின்றது.

தாவரங்களைப் பசுமையாக்கி
மனிதம் துவைத்து

மார்க்கண்டேய வரம் எடுத்து
வெளிச்சம் பாய்கின்றது..

-- 85 ஆம் வருட டைரி 


புதன், 6 ஜனவரி, 2016

சூரிய நண்பன்



சூரிய நண்பன்
கிரணங்கள் காட்டி
பசுமை செதுக்குவான்.,
என்னைச் சமைத்த
உன்னைப் போல.
சலசலத்தோடும் நீரோடை
மனசு சூட்டிக்கொண்ட
உன் நினைவுக் கொலுசின்
இதமான சிதறல்போல.

-- 85 ஆம் வருட டைரி 

செவ்வாய், 5 ஜனவரி, 2016

காற்று மரம் கடையும்



காற்று மரம் கடையும்
காலம்
தீப்புண் வடுவாக்கி
நிறம் தோய்க்கும்.
கருங்கிளைகள்
முகம் கலைத்துத்
துயில் அவிழ்க்கும்.
பனிப்புற்கள்
பூ விழுங்கி
நிலம் கடிக்கும்.
ஈரத் தடம் பதிக்கும்
என் நெஞ்சில்
உன் நினைவைப் போல.

-- 85 ஆம் வருட டைரி


திங்கள், 4 ஜனவரி, 2016

தாய்



உடனிருந்தும்
அறிமுகம் உணரப்படாத 
ஆளாகி விடுவோமோ ? 
அள்ளிக் கொடுத்தும்
ஆயாசமடையாத 
தாயின் மனவோட்டம்.
நானே அனைவருக்கும் தாய்.
அனைத்திற்கும் தாய் !. 
எங்கும் நான். 
எதிலும் நான். 
எல்லாமுமாய் நான். ! 

-- 82 ஆம் வருட டைரி.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மரபோவியம்



நீ எவ்வளவு பெரிய அழகிய மரபுஓவியம்.
நாங்களோ சின்னப்பிள்ளை கீறல்கள்போல்
மார்டர்ன் ஆர்ட்டுகள்.
நாங்கள் சாயம்போன வண்ணச்சோகங்கள்.
நீ எத்தனை காப்பியங்களின்
மணிமுடியை உணர்ந்திருப்பாய்
நாங்கள் புதுக்கவித்துவம் பெற்றுப் போட்ட
அரைகுறைப் பிரசுபங்கள்.
உன்னைப் பின்பற்ற எங்களுக்குத் தகுதியிருக்கிறதா. என்ன. ?

-- 85 aam varuda diary :) 

Related Posts Plugin for WordPress, Blogger...