மருமக்கள் வழி
மான்யத்தில் நான்காவது மனைவியின் நிலை :-
கவிமணி கூறும்
மருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவி மிகவும் அழகானவளாக வர்ணிக்கப்படுகிறாள்.
அவளின் மஞ்சள் பூச்சும், மயக்கிடும் பேச்சும், கொஞ்சிடும் மொழியும், தாசிகள் மெட்டும்
தன் கணவனை மயக்கி விட்டதாக ஐந்தாவது மனைவி ஆத்திரத்துடன் பகிர்கின்றாள்.
அவள்
“அடுக்களை வந்திடாள்
– அரக்குப் பாவையோ ?
கரிக்கலம் ஏந்திடாள்
– கனக சுந்தரியோ ?
வாரிகோல் ஏந்திடாள்
– மகாராணி மகளோ ?
வெய்யிலில் இறங்கிடாள் – மென்மலர் இதழோ ?
வெய்யிலில் இறங்கிடாள் – மென்மலர் இதழோ ?
குடத்தை ஏந்திடாள்
– குருடோ நொண்டியோ ?”
என்று கூறுவதன்
மூலம் ”நான்காவது மனைவி கணவனைக் கைக்குள் போட்டுக் கொண்டவள். அவள். அலங்காரத்தினால்
கணவனை மயக்குகின்றாள். அதே சமயம் அவள் செய்யவில்லை எனக் கூறும் வேலைகள் அனைத்தையும்
தான் செய்வதாகக் கூறும் “ஐந்தாம் மனைவி மேலும்
கூறுகின்றாள். “நான்காமவள் ஒரு வேலையும் செய்வதில்லை. ஒரு துரும்பைக் கூடத் தொடுவதில்லை.
எந்நேரமும் அலங்காரம் செய்யவும், கணவனை மயக்கி மற்றவரை ( மற்ற மனைவியர் நால்வரையும்
) ஏச்சுக்குள்ளாக்கிடும் பாவியாகக் காட்டப்படுகின்றாள்.
இதுவே மருமக்கள் வழி மான்யத்தில் நான்காம் மனைவியின் நிலை.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))