எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 15 ஜூன், 2015

பேனாப் பிரம்மாக்கள்



பேனாப் பிரம்மாக்கள்
உருவாக்கிய வாக்கிய மனிதர்கள்.
தாள் சோறு திங்க
வரிப்பந்தியில் ஓடிவந்து
குந்துகின்றார்கள்

இவர்கள் எந்தப் பார்வைப்
பஸ்ஸில் பயணிக்கக் காத்திருக்கும்
கருப்பு முண்டாசுக்காரர்கள்.

இத்தனை நாள் தவங்கிடந்த
இந்தப் பேப்பர் விசுவாமித்திரன்
எந்தப் பேனா ஊர்வசியின்
நாட்டியத்தில் மயங்கி
எழுத்து மகவாய்ப்
பெற்றுக் கொள்கிறான்

ஆடுதோடா இலையான
இந்தப் பேப்பர்களை
இந்தப் பேனா ஆடுகள்
எப்படி மேய்கின்றன.

இந்த எழுத்துக்கள்
பேப்பர் குழந்தைகளுக்குப்
பேனாக்காரர்கள் வெட்டிவிட்ட
சம்மர் கட்’ கள்.

ஊரில் பாதிப்பேர்
வேலையில்லாமல் தவிக்கும்போது
ரிடயர்ட் ஆகும் வயதான
இந்தப் பேனா இன்னும்
உற்சாக வாலிபனாய்
வேலை செய்கின்றது.

இந்தப் பேப்பர் அப்பாக்கள்
எந்த ஹாஸ்டலுக்குப் போன
எழுத்துப் பெண்களுக்குக்
காத்திருக்கிறார்கள்.

இந்த எழுத்துக்கள்
எந்த நரையோடிய
தலையிலிருக்கும்
கறுப்பு மயிரிழைகள்.

இந்தப் பேனாக்கள்
எந்தப் பாதையில்
தடம்பதிக்கும்
ஒற்றை டயர்கள்.

இந்தப் பேனாக்கள்
எந்தப் பேப்பர் தலையைச் சீவிவிடும்
ஒற்றைப் பல் சீப்புக்காரர்கள்.

இந்தப் பேனாக்கள்
எந்த சிந்தனை மீன்களை
வாந்தியெடுக்க ஒற்றைக்கால்
தவம் செய்யும் கொக்குகள்.


4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு வர்ணனை...!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! நன்றி!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி தளிர் சுரேஷ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...