எந்தத் தவமும் செய்யவில்லை.
நெருப்பின் மேலோ
ஒற்றைக்காலிலோ
தலை கீழாகவோ..
பகீரதனைப் போலோ..
மாதம் மும்முறையல்ல
விரும்பிய போதெல்லாம்
துளித் துளியாய்
உனதன்பு பொழிகிறது.
மாமழையே..
குளிர்ந்த கல்லாய் நனைகிறேன்.
தனக்குள்ளே அணைகிறேன்
கூதல் நெருப்பே..
துணை திரும்பும்.
ஓடமாய்த் தேர் ஓடும்
இது கார்காலம்
5 கருத்துகள்:
அருமை...ரசித்தேன் சகோதரி...
வாழ்த்துக்கள்...
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! நன்றி!
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! நன்றி!
நன்றி தனபால் சகோ
நன்றி சுரேஷ்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))