இன்னுமொரு நாள்.
ஜன்னலோரம் உணவுக்காய்க்
காத்திருக்கிறது காக்கை.
சொட்டுச் சொட்டாய் வடிந்து
சத்தமெழுப்பி
இறுக்கத் திருகச் சொல்கிறது குழாய்.
தயங்கித் தயங்கி
உள்நுழைது காபி மணத்தை
நுகர்ந்து செல்கிறது காற்று.
விசிலடிக்கிறது குக்கர்.
இசைக்கிறது கெடிகாரம்.
அழைக்கிறது துவைக்கும் யந்திரம்.
துலக்கும் பாத்திரங்கள்
கதறிக் கொண்டிருக்கின்றன
வேலைக்காரி கையில்.
தொடங்க வேண்டாம்
இன்னொரு நாளை..
புறம்தள்ளித் தானே
ஓட்டத்தைத் துவங்கி
பிடறி பட ஓடிக்கொண்டிருக்கிறது அது.
2 கருத்துகள்:
இப்படியே தொடர்ந்தால் சலிப்பு வந்து விடுமோ....?
ஆம் தனபாலன் சகோ..:(
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))