எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2013

வெள்ளந்திச் சிரிப்பு :-

வேகவைச்ச வள்ளிக்கிழங்கோ,
சோளமோ , கடலையோ
பனங்கெழங்கோ,
எலந்தவடையோ
உப்பொரசி ருசிக்குமடி
உன் கரகரத்த கைபட்டு.
பள்ளிக்கூட முக்குல
மொளகாதூவி மாங்கா பத்தை,
கொடுக்காபுளி,
கமர்கட்டு,பெப்பர்மிண்டு,
சூடமிட்டாய் கல்கோனா
இனிப்பும் புளிப்புமா
நாவொரசிக் கடக்குதடி,
ஓடும் பஸ்ஸில்
சேவல்கொண்டை
பாம்படம் அசைஞ்சாட
சின்னாளப்பட்டோட
ஒரு வெள்ளந்திச்சிரிப்பை
அள்ளி அள்ளி ருசிக்கும்போது.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

வாழ்த்துக்கள் சகோதரி...

மாதேவி சொன்னது…

ஆகா! சிறுவயது காலத்து நினைவு எல்லாம் வருகிறதே.

மகள் இரண்டுநாளுக்கு முன்புதான் தோசைபோன்ற சாயத்தட்டு சாப்பிட வேண்டும் என்றாள். நண்பியோ இலந்தைப்பழம் என்கிறாள் எங்கே போவது ??

பாம்படமும் சின்னாளப்பட்டும் வெள்ளந்தி சிரிப்பும் கண்டிருக்கேன் இப்பொழுது கிடைக்குமா ??

அழகிய கவி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்,

நன்றி மாதேவி.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...