தார் ரோட்டில்
குதித்தோடும் வெய்யிலுக்குக்
கவரி வீசிக்கொண்டிருக்கிறது
சாலையோர மரம்
வெக்கையோடு வீசும் காற்றை
விளாரிக்கொண்டிருக்கிறது
கருவேலம்
முள்ளாய் வெடித்த கம்மாயில்
சூம்பிக்கிடக்கின்றன
வெள்ளரிகள்
பறக்கவோ நிற்கவோ நடக்கவோ
என்ன செய்வதெனத் திகைத்துக்
காலூன்றத் தவித்துக் கொண்டிருக்கின்றன
பறவைகள்.
வெப்பத்தைக் கக்கி
நீரை உறிஞ்சிக் கருவேலத்தோடு
போட்டி போட்ட சூரியன்
துண்டாய்ப் பிரிந்தோடுகிறது தொலைக்காட்சியில்