நித்ய வழிபாடுகளுக்குள்
சிக்கித் தவிக்கிறது என் ஆன்மீகம்
எங்கெங்கும் நிறைந்து
என் இசை போல் வழிந்து
நிரம்பியும் கரைந்தும் செல்கிறான் ஈசன்
கட்டிவைக்கும் வித்தை தெரிந்தும்
கடமைகளின் பேரால்
கட்டவிழ்த்து விடுகிறேன்.
கன்னத்தில் கை பதித்துக்
கண்ணுக்குள் கண் கோர்க்கக்
காத்திருக்கிறான் என் கண்ணபிரான்