எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 டிசம்பர், 2017

உதயம்

சித்திரை
அது உன் முகத்திரை

வைகாசி
எப்போதும் வேண்டும் உன் ஆசி

ஆனி
நானா உன் ராணி ?

ஆடி
உள்ளுக்குள் உனைத் தேடி.

ஆவணி
( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி.

புரட்டாசி
நானோ உனது பாதத்தூசி.

ஐப்பசி
எனக்கு மனம் முழுக்க இலக்கியப் பசி.

கார்த்திகை.
யாராலும் முடியாதது உன்னுடைய ஈகை

மார்கழி
உன் யோசனைகளில் என்னைக் கழி

தை
உனக்கு உறைக்குமா உண்மை.

மாசி
நீ காலம் கழி என்னை ஏசி

பங்குனி.
நல்ல உதயம் பிறக்கவேண்டும் இனி.


-- 88 ஆம் வருட டைரி. :)

திங்கள், 4 டிசம்பர், 2017

காய்ப்பு.

கிடக்கட்டும்
அந்த வயல்கள்.
எப்போதும் சாகுபடி செய்து
என்ன பெற்றோம் ?

ஏ! சின்னச் செடியே
இந்தச்
சித்திரைக்கா
சுருள்வது?
சோம்பாதே.
சிரித்து நில்.
சுபிட்சம் வரும்.

நீ
சீகைக்காய்களாய்க்
காய்த்துப் போ.
நீ
காய்த்துப் போனால்
பலன் உண்டு என்றால்
காய்வதற்கு ஏன் வருத்தம் ?

உன்
மனத்தைக்
காய்க்கச் செய்து
தூகைகளையும் நேசி.
தூகைகளும் தழையலாம்.


-- 14 . 3. 88.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

சீய்த்தல்.

இரையில்லாத மண்ணைக்
கொத்தும் கோழியாய்
தனிமை என்னைச்
சீய்த்துப் போடும்.

அவ்வப்போது
தன் அலகால்
ஆழம் பார்க்கும்.
ஞாபகப் பிரதேசத்தின்
ஏதோ ஒரு புழுவை
அரைகுறையாய்ப் பிடுங்கி
ஆராய்ந்து மெல்ல உண்ணும்.

நினைவுகளோ
மண்புழுக்களாய்
நெளிந்து நீளும்,
ஞாபக மண்ணில்,

கோழி
பாலைவனத்தையும்
சோலை வனத்தையும்
கிளறி உண்டு ஓயும்..

மனசுள்ளும்
வெளியேயும் எப்போதும்
இரண்டு கோழிகள் எனக்காய்..
என்னைக் கூறு போட்டுக் கொண்டு..


-- 82 ஆம் வருட டைரி. :)

Related Posts Plugin for WordPress, Blogger...