இணையின் துணை
ஒவ்வொரு நாளையும்
துகிலுரிக்கிறது நாட்காட்டி.
உரிக்க உரிக்க வெங்காயம் போல
ஒன்றுமில்லாமல் போகிறது வாழ்க்கை.
ஒரு ரயில் பிரயாணத்தில்
சந்திப்பதாய் நகர்கிறது இணையின் துணை.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நோக்கிப்
பயணிக்கிறது புகையிரதம்.
விடியத் துவங்குகிறது
சந்தியாகாலத்திலிருந்து தொடர்ந்த இருட்டு.

அருமை சகோ...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
உரிக்கும் வெங்காய்ம்போல் அல்ல,
பதிலளிநீக்குஅதை விளையச்செய்கிற நிலமாய்த்தான்
இருக்கிறது வாழ்க்கை.
இலக்கு நோக்கி பயணிக்கிற புகையிரதமும்,
விடியத்துவங்குகிற இருட்டுமே அதற்கு உதாரணங்களாய்.வாழ்த்துக்கள்/
நன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி விமலன்