வெள்ளி, 13 டிசம்பர், 2013

நிமிர்தல்.

முதலெது முடிவெது
தவிக்கிறது அன்னம்.

வராகம் முயல
தாழையுதிர்ந்து
தண்ணீர் தள்ளிப்
பாலுன்னும் அன்னத்தைப்
பொய்ப்பிக்கிறது.

 தேடலில் களைக்கும்
வராகம் நிமிர்ந்தமர்கிறது
உண்மைச் சிம்மாசனத்தில்.

3 கருத்துகள்:

  1. சகோதரிக்கு வணக்கம்
    அருமையான சிந்தனைக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி. என் முதல் வருகையிலேயே கவியைக்கண்டு தங்களது தளத்திலும் இணைந்து விட்டேன்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன் சகோ

    நன்றி அ. பாண்டியன் :)

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))