குருவிகள் கொத்திய
தான்யம் சிதறிக்கிடக்கிறது
முற்றமெங்கும்.
மரத்தொட்டியில்
சிறுமி ஊற்றிய நீரில்
சில மொதும்பிக் கிடக்கின்றன.
லேசாய்த் தூறும் தூறலில்
சில முளைவிட்டும்.
வெய்யிலும் காற்றும்
கூடமெங்கும் குளிர் அனலாய்
மாறி மாறி வீசுகிறது
தானிய மணத்தை.
அலகைத் தீட்டிக்
காத்திருக்கின்றன குருவிகள்
அடுத்த கைப்பிடி இறைக்காய்.

தான்யம் சிதறிக்கிடக்கிறது
முற்றமெங்கும்.
மரத்தொட்டியில்
சிறுமி ஊற்றிய நீரில்
சில மொதும்பிக் கிடக்கின்றன.
லேசாய்த் தூறும் தூறலில்
சில முளைவிட்டும்.
வெய்யிலும் காற்றும்
கூடமெங்கும் குளிர் அனலாய்
மாறி மாறி வீசுகிறது
தானிய மணத்தை.
அலகைத் தீட்டிக்
காத்திருக்கின்றன குருவிகள்
அடுத்த கைப்பிடி இறைக்காய்.
ஒவ்வொன்றும் அழகாக உள்ளது ...
பதிலளிநீக்குவாசிக்கையில் எதோ தோன்றுகிறது ...
அழகான எளிமையான உணர்வுகளின்
வெளிப்பாடு ...!!!
நன்றி ஜெயசரஸ்வதி.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!