புதன், 28 நவம்பர், 2012

தினச்சண்டை

கோட்டான்கள் ஒலிக்க
நிலவுக் கேடயத்தோடு
நகர்கிறது இரவு.

பொருதவரும்
சூரியனை
வழிமொழிகிறது சேவல்.

பாயும் ஒளிவாளை
நிலவில் ஏந்திப் பிடித்து
உள்மறைகிறது இரவு.

கூடடையும் பறவைகள்
இந்த தினச் சண்டையைப்
புதுப்பிக்கின்றன மாலையில்.

3 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனை வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. கூடடையும் பறவைகள்
    இந்த தினச் சண்டையைப்
    புதுப்பிக்கின்றன மாலையில். - Arumai. Nalla iravil manathil irupathai mainthukolla.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))