செவ்வாய், 27 நவம்பர், 2012

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து (” அவர் ”செல்வகுமார் கேட்டதற்காக எழுதியது)

அல்லும் பகலும் விரும்பு
ஆசையின் தூரம் கடந்து
புறப்படு உடனே விரைந்து
புவியின் ஈர்ப்பைக் கடந்து

சொல்லும் செயலும் தொடங்கு
செல்லும் திசையை அறிந்து
உழைப்பை உணர்வை வழங்கு
உயர்வாய் என்றும் உயர்ந்து.

விழுந்து கிடந்தாலும் முளைப்போம்
விழுப்புண் என்றே நினைப்போம்
வெட்டுக்காயமும் தழும்பும் சகஜம்
விடாமல் போராடுவதே நிஜம்  .

விண்ணும் கோளும் தாண்டி
வருவோம் உண்மை தோண்டி
எண்ணும் எண்ணம் வெற்றி
எங்கும் எதிலும் வெற்றி

3 கருத்துகள்:

  1. /// சொல்லும் செயலும் தொடங்கு...
    செல்லும் திசையை அறிந்து...
    உழைப்பை உணர்வை வழங்கு...
    உயர்வாய் என்றும் உயர்ந்து... ///

    அருமை வரிகள்...

    பதிலளிநீக்கு
  2. விண்ணும் கோளும் தாண்டி
    வருவோம் உண்மை தோண்டி
    எண்ணும் எண்ணம் வெற்றி
    எங்கும் எங்கும் வெற்றி- Vetri kodi engum natti vara unarvuttum varigal.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))