திங்கள், 25 ஜூலை, 2022

கல் பயணம்.

ஒரு கூழாங்கல்லாய்க்
கிடக்க விரும்புகிறேன்.
நீ உருட்டும் திசையெல்லாம்
உன் கூடவே பயணிக்க.
எங்கோ என்னைக் கொண்டு 
சேர்த்துவிட்டு
நீ மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறாய்
வெய்யிலில் கண்மினுங்க
உன் வெம்மைத் தழுவலில்
மதிமயங்கிக் கிடக்கின்றேன். 
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))