வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

சாணை.

நீண்ட நாள் கழித்துக் கவிதை போல ஒன்று எழுதுகிறேன்.
திரும்பத் திரும்ப நீ அழைத்த என்பெயர் காதில் ஒலிக்கிறது.
இனிப்பாய் உன் குரல் பட்டுக் கனிந்திருந்தது என் பெயர்.
நான் உச்சரித்துப் பார்த்தேன் ஒரு மாற்றமுமில்லை.
மருகி மருகி வேண்டி நிற்கும் வார்த்தைகளைத் தள்ளுகிறேன்
இரக்கமுடையவள் என்று கூறிக்கொண்டே
வார்த்தைச் சாணையால் வீறுகிறேன்
கீறல்களோடு நீ தனித்திருக்க.
மறுதலித்து நடக்கிறேன்
அது என் பெயர்தான் ஆனால் அல்லவென்று.
  

3 கருத்துகள்:

  1. சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள். உங்கள் பதிவு எங்கள் தளத்தில்...
    "டைரிக் கிறுக்கல்கள். | கவிதை | சாணை : சிகரம்
    தொடருங்கள். தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சிகரம் பாரதி சகோ

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))