செவ்வாய், 1 டிசம்பர், 2015

வண்ணக் கேள்விக்குறி.



என்னை வெகுவாகப் பாதித்தது 
அந்த வானவில்தான்
இது வெள்ளைப்பூ மனது.
ஆனால் விதவைப்பூவல்ல
இது நிர்மலமான நீலம்
ஆனால் சாயம்போன ஊதா அல்ல
இது ஒரு கருநீலக் கரிச்சான் குருவி
இது ஒரு வயசுப் பெண்ணின் பசுமை
இது ஒரு பிறந்த குழந்தையின் எலுமிச்சை மஞ்சள்
இது ஒரு ஆரஞ்சுத் தோட்டம்.
இது ஒரு வெறிபிடித்த சூரியகிரகணம் அல்ல
அது ஒரு வண்ணக்கலவை.
நெஞ்சைச் சுண்டி,
விடமுடியா
விடைபகரமுடியா
வண்ணக் கேள்விக்குறி. !

-- 85 ஆம் வுடைரி. 

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))