இரகசியம்
பாவம்
யாருக்கும் தெரியாதென்று
வானத்து நட்சத்திரங்கள்
கண்ணடித்துக் கொள்கின்றன.
>>>>>>>>>>>>>
பரிமாற்றங்களுக்கு
அழைப்பு விடுத்ததால்
என் பாசக் கரங்கள்
நீண்டு போனது
உன்
இருப்பிடம் வரை. !
>>>>>>>>>>>>>>>
நீள் வெளியும்
விரிநிலமும்
உரசிக் கொள்கிற
தொடுவானமாய்
நம்
கனவுகளும் வாழ்க்கையும்.
>>>>>>>>>>>
முகத்துக்கு முன்னால்
முகமன்கள் பேசும்
முதுகுக்குப் பின்னால்
சதிகள்
தீட்டும் தேசமிது.
சதி தேசம் சேதமாக்கட்டும்
பதிலளிநீக்குஹ்ம்ம்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!