அறிவு:-
சிகைக்குள் தலை கலக்கும்
பூச்சி உடல் நெளிக்கும்
சிறகசைத்துப் பரிசோதிக்கும்
கேள்விப்பாதுகை பார்த்து
அகலிகைக் கல்லாய்க் குந்தியிருக்கும்.
தாழம்பூ நம்பாது வாமனம்
மூக்கு விடைக்கக் காற்றழுத்திக்
காலால் நோண்டி மண்ணில் தேடும்
இரை நோக்கிப் புலிக்கண்கள்
அளவெடுக்கும்
ப்ரளயம் சரிக்கும், அழிக்கும்
சிறகு வலிக்க
பூச்சி ஓய்வெடுக்கும்
தலைமேல் சிகை சுருளும்.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
இவ்வளவா...?
பதிலளிநீக்குஆம் :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!