திங்கள், 11 மே, 2015

தாய்மை:-



தாய்மை:-

ஊர் மரங்கள் பூராவும்
நகைகள் காய்த்துத் தொங்கும்.
சில செடிகள் புஷ்பிக்க ஏங்கும்
மரங்கள் பூக்களை
மடியிலிருந்து
உதறித்தள்ளும்.
ஊரெல்லாம் சுமக்க வைக்கும்.
செடிகளோ
சூரியனிருந்தும்
நீரிருந்தும்
மண் வளமிருந்தும்
பச்சையத் தளதளப்பிருந்தும்
பூக்களைப் ப்ரஸவிக்கத்
தவம் அனுஷ்டிக்கும். 

-- 82 ஆம் வருட டைரி

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))