ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

நிலவு மீனும் நீர்ச்சாரையும்.



இருள் நதியில்
நீந்திக்கொண்டிருக்கிறது
நிலவு மீன்
*         *        *
இருள் குழம்பில்
அரிசியப்பமாய்
நனைந்துகிடக்கிறது நிலவு.

*                   *               *

மேகப் பிடறி சிலிர்க்க
ஓடும் இரவில்
ஆரோகணிக்கிறான் நிலவரசன்.
*                  *               * 
சுவற்றுத் தவளையை
விழுங்கிக்கொண்டிருக்கிறது
மழைநீர்ச் சாரை.


4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))