ஞாயிறு, 8 மார்ச், 2015

போதையும் பேதையும்.



உங்கள் கண்களில் வழிந்த
திராக்ஷை ரசத்தை
என் கண்களால்
ஒருகணம்தான் பருகினேன்.

ஆனால் எனக்குள்ளோ
யுக மயக்கம்.

உங்கள் நினைவு
எனக்குப் போதை.

உங்களைப் பார்த்தாலும் போதை.
உங்களோடு பேசினாலும் போதை.
உங்களோடு சிரித்தாலும் போதை.
உங்களருகே அமர்ந்தாலும் போதை.
உங்களை அணைத்தாலும் போதை.

ஏன் உங்களோடு சண்டையிட்டாலும் போதை.

அன்பே ,
உள்ளூர ஊடுருவும்
உங்கள் நினைவே
எனக்குப் போதை.


-- 91ஆம் வருட டைரி.
 

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))