செவ்வாய், 3 மார்ச், 2015

சிவப்புச் சிநேகம்



இது ஒரு விண்ணப்பம்

நண்பனே
நீயும் நானும்தானே
அந்தக் காய்ந்துபோன
ரோஜாக்கன்றை
ரோட்டோரம் கண்டு
பொறுக்கி வந்தோம்.

மண் தொட்டியில்
மெல்ல வலிக்காமல்
ஊன்றி நீரூற்றி
முட்டை ஓடு போட்டு
வெய்யிலடிக்கும்போது
ஓரத்தில் தூக்கி வைத்துப்
பாதுகாத்தோம்.

அது என்னிடம் மட்டும்
ஏன் முள்க்கோபமாய் இறைச்சலிட்டு
உன்னிடம் மட்டும்
சிவப்புச் சிநேகமாயிருக்கிறது..

--82 aam varuda diary. 

3 கருத்துகள்:

  1. முட்டை ஓடு நீங்களா போட்டீர்கள்...? போடக் கூடாதோ...?

    பதிலளிநீக்கு
  2. அப்பிடி இல்லை சகோ சும்மா இது எதுகை மோனையா உனக்கு மட்டும்தான் அது பூ கொடுக்குமா எனக் கேட்டது. :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))