காரணங்களால் அடுக்கப்பட்ட படகு
தத்தளிக்கிறது சுற்றிச் சுழன்று.
எந்தக் காரணமும்
இறங்கமாட்டேனென்று அடம்பிடிக்க
மேலும் சில காரணங்கள்
ஏறிக்கொள்ளக் காத்திருக்க
காற்று வீசும் திசையில்
கவிழத் துவங்குகிறது படகு.
படகும் ஓட்டையும் காரணங்களும்
பாரபட்சமில்லாமல் மூழ்குகின்றன.
தின்னப்பட்ட காரணங்கள் குமிழாய்க் கரைய
எங்கெங்கும் காற்றும் நீரும் மட்டுமே
நிரம்பியிருக்கின்றது.
தத்தளிக்கிறது சுற்றிச் சுழன்று.
எந்தக் காரணமும்
இறங்கமாட்டேனென்று அடம்பிடிக்க
மேலும் சில காரணங்கள்
ஏறிக்கொள்ளக் காத்திருக்க
காற்று வீசும் திசையில்
கவிழத் துவங்குகிறது படகு.
படகும் ஓட்டையும் காரணங்களும்
பாரபட்சமில்லாமல் மூழ்குகின்றன.
தின்னப்பட்ட காரணங்கள் குமிழாய்க் கரைய
எங்கெங்கும் காற்றும் நீரும் மட்டுமே
நிரம்பியிருக்கின்றது.
அருமை சகோ....
பதிலளிநீக்குஅவ்ளோ தான்...! வாழ்க்கையும்...!
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி சகோ
பதிலளிநீக்குஆமாம் தனபாலன் சகோ
காரணங்கள் சொல்லி சொல்லியே வீணாய் போகிறோம்.... கவிழ்ந்துவிட்ட படகு போல..... அருமை
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி கிங் ராஜ் சார்.
பதிலளிநீக்கு