செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தேனோவியம்.

மழைத்தூரிகையின்
நீர்வண்ண ஓவியங்கள்
ஒற்றைக் குழியில் கலைந்திருக்க
சூரியனைப் பிடித்துப் போட்டு
வண்ணம் கலக்கிக் கொண்டிருக்கிறது காற்று.
நீர் கொத்தும் குருவிகள்
மீன் உரசிச் சேர்க்க
தங்கப் பாறை உருக்கித்
தடங்களோடு பதிகிறது
தேனோவியம் ..

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))