சின்ன
வாளியும்
மண்
அள்ளும் கரண்டியும்
வாங்கிக்
கொடுத்தேன்
மகள்
விளையாட
சிப்பி
சங்கு பொறுக்கி
கூடையிலேற்றி
மண் அள்ளி
வீடுகட்டியவள்
இன்று
வீடுகட்டும்
பொறியாளர்.
மாடிப்படியின்
கீழ் ஷோகேஸில்
அவள்
பொறுக்கிய கிளிஞ்சல்கள்
மாடிப்படி
எறி இறங்கும்போது மட்டும்
பார்த்துக்
களிக்கின்றன,
பொறுக்கிக்
கழுவிச்
சோறுபொங்கி
விளையாடிய
தங்கள்
தோழியை.
அருமை சகோ...
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி தனபாலன் சகோ :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!