சனி, 10 ஜனவரி, 2015

தொலைந்த இடத்தில். :-



தொலைந்த இடத்தில். :-

உடம்பில் படிந்திருந்த உப்புக்காற்றும்
பல்லிடுக்கில் வேர்க்கடலை வாசமும்
செருப்பில் படிந்திருந்த மண்ணும்
காட்டிக்கொடுக்கிறது நான்
அவ்வப்போது
கடற்கரை சென்று வரும் தடத்தை.
என் மனைவிக்கு.

இருபது வருடங்களுக்குமுன்
சண்டையிட்டுத் தொலைத்த காதலி
திரும்ப வருவாளா என
தேடித்தான் செல்கிறேன் என்ற
உப்பு உள்ளுறைந்திருப்பது
அவள் அறியாமல் மறைக்கும் யத்தனத்தில்
தடம் அழிக்கும் கடலலையாய்
அவளைத் தழுவிப் புன்னகைக்கும் நான்.

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))