செவ்வாய், 9 டிசம்பர், 2014

மாடாய்.:-



மாடாய்.:-
மாடாய் அசைபோடுவதும்
பருந்தாய் கவ்விச் செல்வதும்,
காக்கையாய் குடல் குதறுவதும்
அவ்வப்போதைய அவதாரம்

கால் மடக்கி வயிறடக்கி
இறக்கை படபடக்க
புதுப்பூக்களின்
தேனை உறிஞ்சும் தேன்சிட்டே
மிகப் பிடித்த பரிணாமம்.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))