திங்கள், 15 டிசம்பர், 2014

ஒற்றை வரி



எல்லா நெஞ்சையும்
ஆர்ப்பரிக்கச் செய்யும்
ஒற்றை வரி
தப்பித்துக்கொண்டே இருக்கிறது.
துரத்துவதில்லை
அதை நானும்
என்னை அதுவும்.

பிறந்திறந்து பிறந்திறந்து
மனசடைத்து
நிரம்புகிறதா எழும்புகிறதா
ரூபமாயும் ரூபமற்றும்.

குதிரை முடியோ யானைமுடியோ
வேண்டுவதில்லை கண்ணித் தடைக்கு
தளைதட்டாத வாசிப்புக்கு.

செதுக்காமலே
காற்றிலும் அலையிலும்
கனிந்து நிற்கும்
இயற்கைச் சிற்பம்.

வார்த்தைகளை அறுத்துக் கோர்த்து
ரத்தம் தோய்க்காமல்
விகாரப் புணர்ச்சியில்லாமல்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))