செவ்வாய், 30 டிசம்பர், 2014

முகப்பறை:- 2



முகப்பறை:-

ஆயா வீட்டின் தானியக் கிடங்கு
கவுனரிசி தட்டைப்பயறு வாசத்தோடு,
முறுக்குவடை மனகோலம் அதிரசம்
டயர்முறுக்கு தேன்குழல் மாவுருண்டை
சில்வர் தூக்குகளில் நிரம்பி வழியும்.
மரவையில் கிடைக்கும்
மாலைப் பலகாரம்.

புட்டுமாவோ சிகப்பரிசி மாவோ
உப்புக்கண்டமோ காயவைக்கப் பரணில்
காப்பித்தட்டுகளும் அலுமினியத் தட்டங்களும்
சூழ்ந்த அறையில் சிலநாள் கிடந்தது
அவளின் ட்ரெங்குப் பெட்டியும்.,
கல்லூரி வாசம் சுமந்த உடைகளோடும்
கலையாத கனவுகள் கொண்ட கவிதைகளோடும்.

3 கருத்துகள்:

  1. நன்றி தனபாலன் சகோ :) உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))