இவளுள்
சின்னக் கனவாய்
குட்டி வஸந்தமாய்
ஸினேஹ மொட்டாய்,
துருதுரு விழியசைப்பாய்
பிஞ்சுக் கைகளாய்
மெத்துக் கால்களாய்
பச்சை மண் வாசமாய்
ஒரு
அசைவு.
பஞ்சுப் பொதிகள்
லேசாய்க் கனக்க,
மல்லிகைச் சரங்கள்
மெல்ல முட்ட
தாயின் வயிற்றில்
தட்டி.
“ நானிருக்கிறேன் உனக்கு ..
அழாதே அம்மா..”
என உணர்த்தும்
குட்டி ஆறுதல்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!