வெள்ளி, 12 செப்டம்பர், 2014

தன்னைத் தானணைத்தல்

நிறைவாய்ப் பொங்கிப் பொங்கி வழிகையில்
தனிமை தேடி ஓடுகிறது ஒற்றைக் கீற்றாய் நீர்.
வழியும் நீரில் தான் எந்த நீரென இனம்காண.

பிரிந்து தனித்துப் பாறையை
வெளிர் ஓவியமாக்கிய தடத்தில்
துயில்கிறது மௌனமாய்ச் சிலகாலம்.

மோனத்திலுறைந்த காற்றலைய
விழிப்பிலிருந்து மெல்லக் கசிந்தபடி
இறங்குகிறது சூரிய விரல் பற்றி..

பிரிந்த சுவடு தெரியாமல்
வேறொரு மடிப்பிலிருந்து இணைகிறது
பிரிந்த தன்னிலிருந்து தானணைத்து.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))