செவ்வாய், 4 ஜூன், 2013

எட்டிய உயரம் வரை..

கறுப்பென்றாலும்
சிவப்பென்றாலும்
வெள்ளையென்றாலும்
கொஞ்சம் பயமெனக்கு.

தினமும் மையிட்டுக் கொள்கிறேன்.
நெற்றி வகிட்டில் குங்குமம்.
வெள்ளி மிஞ்சியும் கூட.

பாசச் சந்தனமும்
விபூதியும் பற்றாகக் கூட.,
பச்சையமாய் சமைக்கிறேன்.

மஞ்சள் நிலவில்
அடர் நீல இரவில்
வண்ணங்கள் தெறிக்கும் கனவில்..

உறங்கும் குருவிதானென்றாலும்
விழிப்பு வந்ததும்
எட்டிய உயரம்வரை
பறக்க மறப்பதேயில்லை தினமும்..:)

3 கருத்துகள்:

  1. உறங்கும் குருவிதானென்றாலும்
    விழிப்பு வந்ததும்
    எட்டிய உயரம்வரை
    பறக்க மறப்பதேயில்லை தினமும்..

    - Muyarchi thiruvinai aakkum. Arumai.

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபால்

    நன்றி மணவாளன்.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))