துளசி..
களிகூர்ந்து
கருணை பொழிய
நனைந்து குளிர்கிறது
தாமரைக் கரங்களில்
துளசி..
தீபத்தின் வெம்மையில்
குளிர்காய்கிறது
திருமாலின் திருமார்பில்.
ஆரத்தி ஒளியில்
செம்மார்பில்
செம்மாந்திறுமாந்து
பிருகுவையும்
சுற்றவைக்கிறது
பாற்கடலை.
ஊறிக் கிடக்கும்
பெருமாளின்
மணம் சேர்ந்து
இணையாகிக்
காய்ந்தும் மணக்கிறது.
மணக்க வைக்கிறது வரிகளும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்....
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!