புதன், 19 ஜூன், 2013

கண்ணீர்க் கிளைகள்

கண்ணீர் முளைவிட்டுக்
கன்னங்களில் கிளைபரப்ப
பூத்துச் சொறிகிறது
இமைப்பூக்கள்

கனவில் செதுக்கிய
கண்ணாடிப் பாளமாய்
வெடித்துக் கிடக்கிறது
மனக்கண்கள்..

வெதுவெதுப்பைச்
சுமந்த இறகொன்று
மெல்லச் சுருண்டு
குளிர்ந்திறங்குகிறது.

தவறவிட்ட
அணைப்பொன்று
கதகதப்பிழந்து
தனித்துக் கிடக்கிறது.

இறக்கைகளால்
போர்த்திக் கொள்ளும்
மரப்பறவை
துயிலத் தொடங்குகிறது.

இருளின் கிளை வழுவி
நழுவும் நிலா
நதி நதியாய்த் தழுவி
கடலில் விழுகிறது.

4 கருத்துகள்:

  1. /// நழுவும் நிலா
    நதி நதியாய்த் தழுவி
    கடலில் விழுகிறது... ///

    ஆகா...!

    பதிலளிநீக்கு
  2. கதகதப்பிழந்து
    தனித்துக் கிடக்கிறது. - கண்ணீர்க் கிளைகள்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))