கண்ணீர்க் கிளைகள்
கண்ணீர் முளைவிட்டுக்
கன்னங்களில் கிளைபரப்ப
பூத்துச் சொறிகிறது
இமைப்பூக்கள்
கனவில் செதுக்கிய
கண்ணாடிப் பாளமாய்
வெடித்துக் கிடக்கிறது
மனக்கண்கள்..
வெதுவெதுப்பைச்
சுமந்த இறகொன்று
மெல்லச் சுருண்டு
குளிர்ந்திறங்குகிறது.
தவறவிட்ட
அணைப்பொன்று
கதகதப்பிழந்து
தனித்துக் கிடக்கிறது.
இறக்கைகளால்
போர்த்திக் கொள்ளும்
மரப்பறவை
துயிலத் தொடங்குகிறது.
இருளின் கிளை வழுவி
நழுவும் நிலா
நதி நதியாய்த் தழுவி
கடலில் விழுகிறது.

/// நழுவும் நிலா
பதிலளிநீக்குநதி நதியாய்த் தழுவி
கடலில் விழுகிறது... ///
ஆகா...!
கதகதப்பிழந்து
பதிலளிநீக்குதனித்துக் கிடக்கிறது. - கண்ணீர்க் கிளைகள்.
நன்றி தனபாலன்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!