திங்கள், 17 ஜூன், 2013

கணங்களைக் கடந்து..

சில சிறகுகள்
உதிர்வது தெரிவதில்லை
மழைத்துளியாய்.
சில வலியெழக்
கிளையாய் ஒடிகின்றன.
அலகு தீட்டி
மரத்தைக் கூர்பார்த்து
நகம் தோய்த்துக்கொள்ளும்
சாமப் பறவைக்கு
இரைபிடிக்கப் போதுமான
இறக்கைகளிருந்தும்
உதிருந்துருளும்
சிறகுகளை சிலகணம்
உற்றுக் கசிந்தபடி நகர்கிறது
கணங்களைக் கடந்து.

3 கருத்துகள்:

  1. அருமை...

    (Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU) - இவைகளை நீக்கி விடலாமே சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))