சில சிறகுகள்
உதிர்வது தெரிவதில்லை
மழைத்துளியாய்.
சில வலியெழக்
கிளையாய் ஒடிகின்றன.
அலகு தீட்டி
மரத்தைக் கூர்பார்த்து
நகம் தோய்த்துக்கொள்ளும்
சாமப் பறவைக்கு
இரைபிடிக்கப் போதுமான
இறக்கைகளிருந்தும்
உதிருந்துருளும்
சிறகுகளை சிலகணம்
உற்றுக் கசிந்தபடி நகர்கிறது
கணங்களைக் கடந்து.
அருமை...
பதிலளிநீக்கு(Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU) - இவைகளை நீக்கி விடலாமே சகோதரி...
நன்றி தனபால்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!