நீல மீனும் தங்கப் பறவையும்..
மேக இறக்கையில்
செந்நிற அலகைத்
தீட்டுகிறது சூரியன்..
அலைத் தானியத்தை
அலசிக் கரை சேர்க்கிறது
நீர்த் துடுப்பு.
தங்கச் செதில் மின்ன
நீல மீனாய்த்
துள்ளுகிறது கடல்.
இரையெடுத்த சூரியன்
இறங்கித் துயில்கிறது
இரவுக் கூட்டுக்குள்.
இன்பமாய் அசைகிறது
அலையும் கடலும்
கடலும் அலையும்..
என்ன அழகான வர்ணிப்பு...!!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
குறிப்பிட்டு சொல்ல முடியாதபடிஅத்தனை வரிகளும் அருமை. அழகான கற்பனை.
பதிலளிநீக்குநன்றி தனபால்
பதிலளிநீக்குநன்றி தீபிகா.