குழந்தைகளின்
ட்ரெயின் விளையாட்டில்
கும்பகோணம் வந்ததும்
சென்னை வந்துவிடுகிறது..
காசு செலவில்லாமல்
கேட்டில் கால்வைத்துந்தி
காஞ்சிபுரமும் கன்யாகுமரியும்
சென்று வருகிறார்கள் குழந்தைகள்.
ட்ரெயின் விளையாட்டில்
எல்லாக் குழந்தையும்
சொந்த ஊர் சொல்லி ஆட
சென்னைக் குழந்தை மட்டும்
தயக்கமாய் தலைசாய்த்துச்
சென்னை என்கிறது.
எங்க ஊருக்கே வாடா நீயும்
என மற்ற குழந்தைகள்
சென்னைக் குழந்தையைத்
தோளணைத்து உந்தும்போது
இன்பமாய்க் கிறீச்சிடுகிறது
கேட்டும்..சேர்ந்து...
ட்ரெயின் விளையாட்டில்
கும்பகோணம் வந்ததும்
சென்னை வந்துவிடுகிறது..
காசு செலவில்லாமல்
கேட்டில் கால்வைத்துந்தி
காஞ்சிபுரமும் கன்யாகுமரியும்
சென்று வருகிறார்கள் குழந்தைகள்.
ட்ரெயின் விளையாட்டில்
எல்லாக் குழந்தையும்
சொந்த ஊர் சொல்லி ஆட
சென்னைக் குழந்தை மட்டும்
தயக்கமாய் தலைசாய்த்துச்
சென்னை என்கிறது.
எங்க ஊருக்கே வாடா நீயும்
என மற்ற குழந்தைகள்
சென்னைக் குழந்தையைத்
தோளணைத்து உந்தும்போது
இன்பமாய்க் கிறீச்சிடுகிறது
கேட்டும்..சேர்ந்து...
எங்க ஊருக்கே வாடா நீயும் - Super.
பதிலளிநீக்குரசிக்க வைத்தது விளையாட்டு...
பதிலளிநீக்குநன்றி மணவாளன்.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நன்றி இலக்கியம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!