சிதறிய தானியங்களைக்
கொத்தும் ஓவியமாய் இருக்கிறது குருவி.
சுளகின் மிளகாய் வற்றல்கள்
காரச் சிவப்போடு கண்ணேறுகின்றன.
நெகிழித் தண்ணீர்
நெகிழ்ந்து நொதித்துக்கொண்டிருக்கிறது.
அனலில் கறுத்துக் கரைந்து
எச்சமிடுகின்றன காக்கைகள்.
தன்னைத்தானே வேட்டியாய்
காயவைத்தபடி இருக்கிறது மொட்டைமாடி.
அருமை
பதிலளிநீக்குஅருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி சௌந்தர்.
பதிலளிநீக்குநன்றி தனபால்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!