புதன், 4 ஜனவரி, 2012

காதல் கோழி.

விடிவதற்குள் கோலமிட
விரைகின்றன உன் கைகள்.
விடியலை கொஞ்சம் பொறுக்கச்சொல்லி
அழகுக் கோலமே கோலமிடும்
அழகை ரசித்தபடி நான்..
அரை நிலா வெளிச்சத்தில்...

காதல் புள்ளியாய் இருந்த நான்
இன்று காதல் கணவனாகி
கோலமிடும் மனைவிக்கு
காவல்காரனாய்..
கம்பளி போர்த்தி படியிலமர்ந்து
சீக்கிரம் முடிக்கச் சொல்லி
அரைத்தூக்கக் கோழியாய்..:)

3 கருத்துகள்:

  1. அழகே கோலமிடும் அழகை ரசிக்கும் கணவன். அருமையான சித்திரம். அரைத்தூக்கக் கோழியாய் என்று முடித்திருப்பது அருமை. காட்சியைப் மனதில் படம் பிடித்த நற்கவிதை. மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. காதல் புள்ளியாய் இருந்த நான்
    இன்று காதல் கணவனாகி
    அருமை

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))