வியாழன், 17 நவம்பர், 2011

கொள்ளை..

பார்த்துப் பசியெடுக்கக்
கல் எறிந்தோம்.
மரமேறி ஒன்றிரண்டு
பறித்துத் தின்றோம்.
இன்னுமிரண்டு பறித்து
மடியில்கட்டி ஓடினோம்.
திருட்டு என்று கட்டிவைத்து
உதைத்தார்கள்..
மொத்தமாய்க் கொள்ளையடித்த
குத்தகைக்காரர்கள்

4 கருத்துகள்:

  1. நிதர்சனம்! உவமானமாக பல விஷயங்களை சிந்திக்க வைத்த நல்ல சிந்தனைக் கவிதை. பதிலுக்கு வழங்குகிறேன் மட்டற்ற மகிழ்வுடன் அட்டியற்ற பாராட்டுக்களை...

    பதிலளிநீக்கு
  2. //திருட்டு என்று கட்டிவைத்து
    உதைத்தார்கள்..
    மொத்தமாய்க் கொள்ளையடித்த
    குத்தகைக்காரர்கள்//
    arumaiyaana varikal... vaalththukkal

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))