சண்டையிட்டுக்கொண்டார்கள்.
மின்னலாய்க்
கீறிக் கொண்டார்கள்.
வார்த்தைகள் தடித்தபோது
பளீர் என இடி இறங்கியது.
மழை வடியும் இமைகளோடு
குனிந்திருந்த மரத்தை
தழுவச் சென்ற தென்றலை
குளிர்காய்ச்சலாக்கி
விரட்டியது ஈரக்கிளைகள்..
கூதலோடு திரும்பிய
தென்றலுக்குக்
கூடலைவிட
இன்பமாய் இருந்தது
அந்த ஊடல்..
Excellent!
பதிலளிநீக்குநாளும் மழையில் நனைந்து நனைந்து
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி சந்திர சேகரன்
கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை. கற்பனை மிகுந்த கவிதை வரிகள் ரசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குகூதலோடு திரும்பிய
பதிலளிநீக்குதென்றலுக்குக்
கூடலைவிட
இன்பமாய் இருந்தது
அந்த ஊடல்..
- Rasanai aaka ullathu.