செவ்வாய், 1 நவம்பர், 2011

திருட்டு.

எங்கிருந்தோ
வாடைக்காற்று
ஜன்னல்வழி
வீட்டுக்குள் உலாவி
திருடிச்சென்றுவிட்டது.
வெப்பத்தை.

தொலைத்ததைத்
திரும்ப வாங்கத்
தேடியலைகிறேன்
குளிரான இடமெல்லாம்
மழையில் நனைந்து
உன்னையும் அணைத்தபடி ..

6 கருத்துகள்:

  1. நண்பி தேனம்மை அவர்களின் கவிதையில் நல்ல கருத்துக்கள் பொதிந்துள்ளன. வாழ்த்துக்கள்..

    கவிமகன்
    kavimagan-india.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. என்னடா கவிதையா என்று சலித்து கொண்டு படித்த எனக்கு இந்த கவிதை மிகவும் பிடித்து போனது அருமையாக இருக்கிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. உங்களின் கிறுக்கல்கள் கூட மிக அருமையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. நன்றி கவிமகன்

    நன்றி அவர்கள் உண்மைகள்.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))