வெள்ளி, 28 அக்டோபர், 2011

சிதறல்கள்..

இனிப்பு வியாதி வரும் என
சிரிக்கமாட்டேன் என்கிறாய்.
இரத்த அழுத்தம் துள்ளும் என
பேசமாட்டேன் என்கிறாய்.
இதயம் படபடக்கும் என
பார்க்கமாட்டேன் என்கிறாய்.
*************************************
நீர்க்குமிழி, பாய்மரக்கப்பல்,
காலறுந்தபட்டம்
இதெல்லாம் தட்டாமாலையாய்
சுற்றிச்சுற்றி..
உன்னைச் சுற்றி நான்
சுற்றுவது போல்.
**************************************
சேற்றையாவது வீசு
சேர்த்துக்கொள்ளாமல் வி்டாதே..
திட்டிவிட்டுப் போ
கொட்டிவிட்டுப் போ
அந்தத் தழும்புகள்
சுகமானதாய்..
**************************************
நீள் வெளியில் காற்றாகி
இழுத்துச் செல்.
முடிவில்லாத வெளியில்
இறக்கைகளில்லாமல் தவழ்வது.
யாதுமற்ற ஒன்றாகி
யாதுமாய் ஆவது.

3 கருத்துகள்:

  1. இனிப்பு வியாதி வரும் என
    சிரிக்கமாட்டேன் என்கிறாய்.
    இரத்த அழுத்தம் துள்ளும் என
    பேசமாட்டேன் என்கிறாய்.
    இதயம் படபடக்கும் என
    பார்க்கமாட்டேன் என்கிறாய்.

    முதல் சிதறல் மிக நன்றாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. யாதுமற்ற ஒன்றாகி
    யாதுமாய் ஆவது.
    -Class! Only possible by Thenu akka! Superb!

    பதிலளிநீக்கு
  3. நன்றி நம்பிக்கை பாண்டியன்

    நன்றி கணேஷ்:)

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))