வியாழன், 29 செப்டம்பர், 2011

அனைத்தும் பொய்யோ..?

முடிந்துபோன கதை ஒன்றின்
இரண்டாம் அத்யாயம்
ஆரம்பமாகி விடுமோ..

மீண்டும் முன்போல
சுயகம்பீரம் அழிந்து
கரைந்து போய் விடுவோமோ..

நிழலைப் பிடிக்கும் ஆவலில்
வெளிச்சத்தையே காணாமல்
போக்கி விடுவோமோ..

கால ஓட்டத்தில்
நசிந்து போகும்
பலவீன உணர்வுகள்
கலங்க அடிக்கிறதே..

அன்பு காட்டினால்
பரிசாகக் கிடைப்பதும் அதுதான்
என்ற அன்பு மொழிகள்
அனைத்தும் பொய்யோ..?

3 கருத்துகள்:

  1. அம்மா..
    அன்பு காட்டினால்
    பரிசாகக் கிடைப்பதும் அதுதான்
    என்ற அன்பு மொழிகள்
    அனைத்தும் மௌனங்களாகவே முடிகின்றது
    மனித அசைவைத்தாண்டி வலிகளாகப் பரவுகின்றது.
    என்ன தான் செய்ய..?
    பொய்யோ என சொல்ல முடியவில்லை
    உண்மையாக்க நாங்கள் உருவாகுவோம் .

    எனினும் அம்மா யாவும் பதிலிட முடியாத வரிகள்
    விடைகளாய் இருக்கும் போது
    நானும் மௌனித்தப்படி தானே..

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் அகிலா.எல்லாரும் அப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))