ப்ரிய நண்ப,
தேவதைகளைச் சபிக்காதே
ஏற்கனவே அவர்கள்
அழுக்கடைந்து கிடக்கின்றார்கள்.
துடைக்கத்தான் நினைத்தேன்
ஆனால் அவர்களென்ன
ஷோகேஸ் பொம்மைகளா
படிந்திருப்பது
ஒரு யுக அழுக்கல்லவா?
கவிந்திருப்பவர் நிமிரட்டும்
நண்பா
அதுவரை
தயவு செய்து
தேவதைகளைச் சபிக்காதே.
-- 85 ஆம் வருட டைரி.
அருமை
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!