செவ்வாய், 26 மே, 2015

கொடி



ஒரு கொடி துடித்துக்
கொண்டிருக்கிறது
கத்திரிக்கோல்
பார்வைகளுக்கு அஞ்சி

இங்கே பாரியும் இல்லை
அகிலனின் பாலனும் இல்லை

கொழுகொம்புதான்
வேண்டாம்
சின்னச் செடித்தண்டுகூடப்
பக்கமில்லை.

கன்னிக் கொடி அது
ஆனாலும் கூந்தலழிக்க
அது மணிமேகலை அல்லவே

மெல்ல நெருங்கும்
கருக்கரிவாள் காலனுக்குப்
பயந்து, ப்ளஸ்டூ பையனாட்டம்
க்ராப் வெட்ட அஞ்சி ஒளிகிறது.

ஒரு கொடி துடிக்கிறது
மணிபல்லவப்பூதம் கூட இல்லை.
எங்கே தொலைந்தது
அந்த மணிபல்லவப் பூதம்

கத்திரிக்கோல்
பார்வைகளுக்கு அஞ்சி
ஒரு கொடி கண்ணிமைக்காமல் கிடக்கிறது.

-- 82 ஆம் வருட டைரி. 

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))